2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

டிக்டாக் செயலியை தடைசெய்யும் சட்டம்: உத்தரவை ஒத்திவைக்க கோரும் டிரம்ப்

Freelancer   / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக  பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை இயற்றினார்.

அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட் டான்ஸ் நிறுவனம்,  கடந்த மே மாதம், வாஷிங்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, பைட் டான்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19ஆம் திகதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப் படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த 18ஆம் திகதி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக  பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அரிசோனா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டாக் செயலி உதவியாக இருந்திருக்கலாம். மேலும் சில காலத்துக்கு அந்தச் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என குறிப்பிட்டார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் சார்பில் அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அமெரிக்க அரசின் புதிய சாலிசிட்டர் ஜெனரல் ஜான் சாயர் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், டிக்டாக் செயலியை தடைசெய்யும் உத்தரவை உயர்நீதிமன்றம் நிறுத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த டிரம்ப், அதிபராக பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X