2025 ஜனவரி 15, புதன்கிழமை

ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி

Freelancer   / 2024 செப்டெம்பர் 14 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளை அமெரிக்காவின் ஜோர்ஜியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
2020 ஆம் ஆண்டில் தேர்தலில் குறுக்கீடு செய்தமை தொடர்பில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 
 
அரச சட்டத்தரணிகள் மேற்படி வழக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அறிவித்திருந்தார். 
 
2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜோர்ஜியாவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தோல்வியை முறியடிப்பதற்குச் சதி செய்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. 
 
இந்தநிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் 14 இணை பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X