Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 மே 23 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் வரும் ஜூலை 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டிருக்கிறார்.
பிரித்தானியாவின் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில் நேற்று அமைச்சரவை கூட்டம் கூடியது.
இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து வரும் ஜூலை 4ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு குறித்து எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி கூறுகையில், ‘தேர்தலை எப்போது நடத்தினாலும் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம்’ என்றார்.
தற்போது பிரித்தானியாவை ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிடம் தோல்வியடையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. இதனால் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago