Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 06 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தி குளோப் மற்றும் மெயில் வெளியிட்டுள்ள தகவல்களில், ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “ஜஸ்டின் ட்ரூடோ எப்போது இராஜினாமா பற்றி அறிவிப்பார் என்பது பற்றி எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் புதன்கிழமை நடைபெற இருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு முன்பு அது நடக்கும்” என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் பற்றிய கேள்விக்கு கனடா பிரதமர் அலுவலகம் உடனடி பதில் அளிக்கவில்லை. ட்ரூடோ உடனடியாக வெளியேறுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று, அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ட்ரூடோ பொறுப்பேற்றார். அப்போது கட்சி ஆழ்ந்த சிக்கலில் இருந்தபோது முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ட்ரூடோவின் விலகல், ஒக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போயகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago