Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 ஜூன் 30 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதிக்கு மண்டை ஓட்டுடன் சூனியம் வைத்து சதி செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸுவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக அந்நாட்டின் அமைச்சர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், முகமது முய்ஸு புதிய ஜனாதிபதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீனாவுடன் நெருக்கம் காட்டி, இந்தியாவை அதிகம் பகைத்துக்கொண்டார். இதனால் மாலத்தீவு குறித்து இந்தியாவில் அதிகம் பேச்சு அடிப்பட்டது.
இப்படி இருக்கையில், தற்போது மற்றொரு விவகாரம் குறித்து ஜனாதிபதி முகமது முய்ஸுவின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. அதாவது முய்ஸுவுக்கு சூனியம் வைத்ததாக அந்நாட்டு அமைச்சர் பாத்திமத் ஷம்னாஸை மற்றும் மற்றொரு அமைச்சரான ஆடம் ரமீஸ் என 2 அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாத்திமத் ஷம்னாஸ் மாலத்தீவின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்து வந்தார். தற்போது இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
பொதுவாக மாலத்தீவில் பில்லி சூனியம் விவகாரம் அடிக்கடி பெரும் பஞ்சாயத்தாக வெடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனதூவி பகுதியில் 62 வயது மூதாட்டி பக்கத்து வீட்டுக்காரரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் மூதாட்டி பில்லி சூனியம் வைத்ததாகவும், எனவேதான் குத்தினேன் என்றும் பக்கத்து வீட்டுக்காரர் கூறியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த சம்பவத்திலும் மூதாட்டி ஈடுபடவில்லை என பொலிஸார் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு முன்னர் 2012ல் மற்றொரு சம்பவம் நடந்தது. அந்த ஆண்டு ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டம் ஆளும் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியது. எனவே எதிர்க்கட்சி தலைவர்களை தேடி தேடி கைது செய்தனர். அவர்களது அலுவலகங்களில் ரெய்டு நடத்தினர். இப்படி ரெய்டு நடத்தியபோது எதிர்க்கட்சியினர் சிலர் சபிக்கப்பட்ட சேவலை பொலிஸ் காரர்கள் மீது வீசியுள்ளனர். இதனால் பொலிஸார் அப்படியே பின்வாங்கினர்.
இப்படியாக மாலத்தீவில் பில்லி சூனியம் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஜனாதிபதி முய்ஸுவுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இது தொடர்பாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
மாலத்தீவை பொறுத்தவரை பில்லி சூனியம் வைப்பது என்பது கிரிமினல் குற்றம் கிடையாது. ஆனால், இஸ்லாமிய சட்டத்தின் கீழ், இதற்காக 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும். பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்டவற்றின் மூலம் எதிர் தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட முடியும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago