Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 14 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 திகதி பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.
எதிர்பாராத இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுத்து, அன்றிலிருந்தே அவர்கள் மறைந்திருக்கும் பலஸ்தீன காசா பகுதியில் ஒரு போரை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
100-வது நாளை நெருங்கும் இப்போரில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆதரவு அளிக்கின்றன. அதேபோல் ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், ஏமன், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.
கடந்த 2023 ஒக்டோபர் 19 திகதி, ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்தும், இஸ்ரேலை எதிர்த்தும், ஏமன் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் செங்கடல் (Red Sea) பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை வான்வழியாகவும், கடல் வழியாகவும் தாக்க தொடங்கினர்.
அப்பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் போர்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளன.
அதனையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஏமன் நாட்டின் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வான்வழி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக கருதாத துருக்கி, ஏமன் தாக்குதலுக்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகன், “ஏமனுக்கும் அமெரிக்க-இங்கிலாந்து படைகளுக்கும் இருப்பது ஒரு சமநிலை இல்லாத போர்க்களம். அளவுக்கு அதிகமாக ஏமன் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தாக்குதல் நடத்துகின்றன. செங்கடல் பகுதியை "ரத்த கடல்" (sea of blood) போல் மாற்றி விட முயல்கின்றன. ஆனால், தங்களை காத்து கொண்டு, தங்கள் முழு சக்தியையும் திரட்டி, இதற்கு ஹவுதி அமைப்பினர் தக்க பதிலடி அளிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago