2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: தமிழக இளைஞன் பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 ஜமைக்கா நாட்டின் பிராவிடன்ஸ் தீவில்,  தென்காசி மாவட்டம் - சுரண்டையைச் சேர்ந்த இளைஞன், சூப்பர் மார்க்கெட் ஒன்றை  நடத்தி வருகிறார். இங்கு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்று (19) அதிகாலை 1.30 மணி (ஜமைக்கா நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி) அளவில் கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து, பணத்தை கொள்ளையடித்து விட்டு, துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 

இதில் விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

 மேலும், துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X