Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூலை 03 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
17 வயதான பெட்மிண்டன் வீரர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள்கூட மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக, மாரடைப்பு காரணமாக 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், இந்தோனேஷியாவில் சீன நாட்டைச் சேர்ந்த பெட்மிண்டன் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் யோக்யாகர்த்தா நகரில் சர்வதேச பெட்மிண்டன் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 30ஆம் திகதி நடைபெற்ற போட்டியின்போது சீனாவின் 17 வயதான ஜாங் ஜிஜி ஜப்பானின் கசுமா கவானோவை எதிர்கொண்டு விளையாடினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்கோர் 11-11 என இருந்தபோது திடீரென சீன வீரர் ஜாங் ஜிஜி சுருண்டு விழுந்தார். சற்று நேரம் என்ன நடக்கிறது என அறியாமல் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில், பயிற்சியாளர்கள் ஜாங் ஜிஜியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் உடனடியாக வரவழைக்கப்பட்டு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மாரடைப்பு ஏற்பட்டு ஜாங் ஜிஜி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜாங் ஜிஜியின் உயிரை காக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போது எதுவும் பலனளிக்காமல் போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மிகவும் திறமைமிக்க வீரராக ஜாங் ஜிஜி இருந்ததாகவும், நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டியவர் இளம் வயதில் உயிரிழந்தது வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாக சீன விளையாட்டு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
ஜாங் ஜிஜி மறைவுக்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago
49 minute ago
51 minute ago