2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சாதனை படைத்தார் சுனிதா

Freelancer   / 2025 மார்ச் 19 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளவில் விண்வெளியில் அதிக நாட்களை கழித்த வீரர்கள் பலர் உள்ளனர். அந்த பட்டியலில் முதல் இடத்தில் ரஷ்ய வீரர்கள் உள்ளனர். அவர்களை தொடர்ந்து அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரரான ஒலெக் கோனோனென்கோ 1,110 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளார். அவரை தொடர்ந்து மற்ற ரஷ்ய வீரர்களான கென்னடி படல்கா (878 நாட்கள்), செர்கெய் க்ரிகலெவ் (803 நாட்கள்), அலெக்சாண்டர் கலேரி (769 நாட்கள்), செர்கெய் அவ்தெயெவ் (747 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அமெரிக்க விஞ்ஞானியான பெக்கி விட்சன் 675 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார். அவருக்கு அடுத்து ரஷ்ய விண்வெளி வீரர்களான ப்யோடர் யுர்சிகின் (672 நாட்கள்), யூரி மாலென்சென்கோ (641 நாட்கள்) ஆகியோர் உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் (609 நாட்கள்) உள்ளார். இதனால், விண்வெளியில் அதிக நாட்களை கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரிசையில் சுனிதா வில்லியம்ஸ் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

சுனிதா வில்லியம்சுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்றாக பணிபுரிந்த பேர்ரி புட்ச் வில்மோர் (462 நாட்கள்) விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 6ஆவது அமெரிக்க விண்வெளி வீரராக உள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X