2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சட்டத்தை இரத்து செய்த பெரு அரசு

Freelancer   / 2024 ஜூன் 26 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருநங்கைகளை மனநல கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் என பட்டியிலிடுவதை நிறுத்துவதாக பெரு நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

திருநங்கைகள் என அடையாளம் காணப்படுபவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கு மருத்துவ உதவி தேவை எனவும் புதிய சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து லிமாவில் கடும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மே 2024இல் நிறைவேற்றப்பட்ட சட்டம் திருநங்கைகள் “மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்” என்று விவரித்த நிலையில், திருநங்கைகள் “நோய்களால்” கண்டறியப்பட்டு, “பொது மற்றும் தனியார் வழங்குநர்கள் மூலம் சுகாதார சேவைகளுக்கு தகுதியுடையவர்கள்” என்று சட்டம் கருதுகிறது.

அதேசமயம், பெரு நாடு, தற்போது “பாலின வேறுபாடு” என்ற சொல்லை மனநல மற்றும் நடத்தை சார்ந்த சுகாதார வகைப்பாடுகளின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .