2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 19 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில், பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியா நாட்டின் ஒயொ மாகாணம், பசொரன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆண்டு நிறைவையொட்டி, அந்த பாடசாலையில்,  புதன்கிழமை (18), கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின்போது பரிசு பொருட்களும் கொடுக்க ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது.

இதனால், நிகழ்ச்சியை காணவும், பரிசு பொருட்களை வாங்கவும் பாடசாலையில் கூட்டம் குவிந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது . இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X