2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குவைத் தீயில் 7 தமிழர்கள் பலி

Freelancer   / 2024 ஜூன் 13 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

 

குவைத்தின் தெற்குபகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரண்டு தமிழர்களும் பலியானதாக நேற்று தகவல் வெளியானது. அதன்பின்னர் மேலும் ஒரு தமிழர் பலியாகியிருக்கும் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருப்பதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .