Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 14 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில், தற்போது குளிர்காலம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு, நோ டிரவுசர்ஸ் டே எனப்படும் கீழாடை இல்லா தினம் கொண்டாடப்பட்டது.
இதன்படி கீழாடைகளை அணியாமல் ஒரு சிலர் சட்டை மற்றும் டை அணிந்தபடியும், சிலர் குளிருக்கு ஏதுவாக கம்பளி ஆடை அணிந்தும் வந்திருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தபடியும், சிரித்து கொண்டும் இருந்தனர்.
ஆண், பெண் பாலின வேற்றுமையின்றி அனைவரும் சகஜத்துடன் காணப்பட்டனர். இதேபோன்று, வயது வித்தியாசமின்றியும் ஆண்களும், பெண்களும் மேலாடைகளை மட்டும் வகை வகையாக அணிந்தபடி, ஆனால் கீழே உள்ளாடை தவிர்த்து வேறெதுவும் அணியாமல் காணப்பட்டனர்.
இதற்காக, முகப்புத்தகம் பக்கத்தில் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதில், “இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு குறைந்த ஆடைகளை அணிந்து வாருங்கள். நீங்கள் உங்கள் கீழாடையை மறந்து வீட்டீர்கள் என்பது போல் இருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குளிர்காலத்தில் இதுபோன்ற அரை நிர்வாண ஆடைகளை அணிந்தபடி வந்து ரயிலில் பயணிப்பது என்பது முதன்முதலாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
உள்ளூர் நகைச்சுவை நடிகரான சார்லி டாட் என்பவரால் இது முதன்முதலில் நடைமுறைக்கு வந்தது. இது பார்ப்பதற்கு கேலியாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும் என அவர் நினைத்திருக்கிறார்.
அந்த தருணத்தில் நடந்த இந்த சம்பவத்தில், 7 பேர் இதேபோன்று அரை நிர்வாண கோலத்தில், அடுத்தடுத்த ரயில் நிறுத்தங்களில் தலா ஒருவர் என்ற கணக்கில் ரயிலில் ஏறியுள்ளனர். ஆனால், ஒருவரை ரயிலில் இருந்த மற்றவர் கவனிக்காதது போன்று நடந்து கொண்டனர். அப்போது இது பரபரப்பாக பார்க்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு, 7ஆவது ஆண்டில் இந்த நிகழவு அடியெடுத்து வைத்தபோது, சர்வதேச நிகழ்வாக மாறியது. நியூயார்க் மற்றும் பிற 9 நகரங்களில் 900 பேர் வரை இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு, ஷாங்காய், பெர்லின், இஸ்தான்புல், லிஸ்பன், டோக்கியோ மற்றும் டொரண்டோ ஆகிய நகரங்கள் உள்பட உலக நாடுகளில் உள்ள 60 நகரங்களில் தற்போது விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago