2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

குரங்கம்மை தடுப்பூசி பரிசோதனைக்கு சீனா அனுமதி

Freelancer   / 2024 செப்டெம்பர் 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் குரங்கம்மைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பரிசோதனைக்கு உட்படுத்த, அந்நாட்டு தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் எம் - பொக்ஸ் எனப்படும், குரங்கம்மை பரவி வருகிறது. குரங்கம்மையைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சில தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவில் குரங்கம்மைக்காக முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை ஆய்வக சோதனைக்கு உட்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்துள்ள அந்நாட்டின் தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“ஷாங்காய் இன்ஸ்டிட்யூட் ஒப் பயோலாஜிக்கல் ப்ரொடக்ட்ஸ்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சினோபார்ம் வாயிலாக நிர்வகிக்கப்படும் தடுப்பூசி குரங்கம்மையை குணப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது. இந்த தடுப்பூசியை சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு தடுப்பூசி பொதுவான சந்தை அங்கீகாரத்தை பெற மூன்று கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான காலத்தை நிர்ணயிக்க முடியாது. விரைவில் சந்தைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்று அதில் கூறப்பட்டுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X