2025 மார்ச் 15, சனிக்கிழமை

காசா மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கும்?

Freelancer   / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்குள் (15), ஹமாஸ்கள் விடுவிக்காவிட்டால், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நென்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து  பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுளலளது.

அப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ஹமாஸ்கள் இறுதியாக தோற்கடிக்கப்படும் வரை, இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலின் அத்துமீறல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு போய் விட்டது என்று குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ், இது இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் விடுதலையைத் தடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து ஹமாஸ்களின் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்டா கூறுகையில், 

"இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களை கண்காணித்து வருகிறோம். ஹமாஸ்கள் அனைத்து விஷயங்களையும் நிறைவேற்றியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை (11) வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஹமாஸ்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டனர். மேலும் காசா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள படைகளை திரும்பப் பெற ஹமாஸுக்கு உத்தரவிட்டுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .