Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 12 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே நடந்த ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், நவ.,5ஆம் திகதி நடக்கவுள்ள நிலையில், வேட்பாளர்களான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இருவரும் முதன்முறையாக விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தின் போது இருவரும் தமது கருத்துகளை அள்ளி வீசினர்.
இந்நிலையில், இருவரில் யார் வெற்றியாளர் என அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அதன்படி, ஜனாதிபதி விவாதத்தின் வெற்றியாளர் கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்பிற்கு எதிரான அவரின் செயல்பாடு நன்றாக இருந்தது. அவர் டிரம்பை மீண்டும் மீண்டும் தூண்டிவிட்டு சமநிலையை இழக்கச் செய்தார் எனவும், கமலா ஹாரிஸ் டொனால்ட் டிரம்பை விவாதத்தில் சரமாரியாக தாக்கி விட்டார் எனவும், டிரம்ப் பெரும்பாலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பைடன் ஆட்சியில் நடந்த சதி மட்டும் பேசிவிட்டு விலகிவிட்டார். ஆனால், கமலா ஹாரிஸ் தெளிவாக விவாதத்தில் செயல்பட்டார் என்றும், டிரம்ப் கோபமுடன் விவாதத்தில் இருந்தார் என்பன போன்ற கருத்துகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
59 minute ago
1 hours ago