2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது: ட்ரம்ப்

Editorial   / 2024 ஜூலை 22 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியுமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்க விரும்புவதாக போட்டியில் இருந்து விலகிய ஜனாதிபதி தெரிவித்தார். இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், செய்தி நிறுவனத்திடம் தனது கருத்தை தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை தேர்தலில் வீழ்த்துவது எளிதாக இருக்கும் என தான் கருதுவதாக ட்ரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலுக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்து, அது குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஹாரிசன் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அக்கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட வேண்டும் என அவருக்கு ஆதரவாக பலரும் சொல்லி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .