2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2025 மார்ச் 15 , மு.ப. 09:05 - 0     - 134

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மார்க் கார்னி கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

'மற்றுமொருவர் கொண்டு செல்ல முடியாத வகையில் நம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டும்" என்று கனடாவின் புதிய பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தமது அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பிரதமராக பதவியேற்றதன் பின்னர் தமது முதலாவது சர்வதேச விஜயமாக அடுத்த வாரம், அவர் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X