2025 மார்ச் 15, சனிக்கிழமை

கனடா பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

Freelancer   / 2025 மார்ச் 15 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார்.

கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24 ஆவது பிரதமராகவும் கனடா வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரியில் தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்தார். இதனையடுத்து லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கனடா பொருளாதார மற்றும் அரசியல் பதட்டங்களை எதிர்கொண்டு வரும் காலகட்டத்தில் கார்னி பிரதமராக பதவியேற்றுள்ளார்.

மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8 ஆவது ஆளுநராக பணியாற்றியுள்ளார். மேலும், 2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக இருந்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .