2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கண்ணிவெடி தாக்குதல்; மூவர் பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 18 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில், போலியோ சொட்டு மருந்து கொண்டு சென்ற மருத்துவ ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில், 3 பொலிஸார் உயிரிழந்தனர்.

உலகளவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டும் போலியோ நோய் பரவி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேவேளை, போலியோ சொட்டு மருத்து முகாம்கள், மருத்துவ ஊழியர்கள், பாதுகாப்பிற்கு செல்லும் பொலிஸார், இராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம், டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை (17), போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

 முகாமை முடித்துவிட்டு மருத்துவ ஊழியர்களும் அவர்களுக்கு பாதிகாப்புக்கு சென்ற பொலிஸாரும் வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

கரக் என்ற பகுதியில் சென்றபோது, அந்த வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், தாக்குதலில் பொலிஸார் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X