2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

கட்டுமானப் பணிக்கு பலஸ்த்தீனர்களுக்கு தடை; இந்தியர்களுக்கு வாய்ப்பு

Freelancer   / 2025 ஜனவரி 01 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதி​யில் பதற்​றமான சூழ்​நிலை உருவாகி​யுள்ளது. இந்த தாக்​குதலின் தொடர்ச்​சி​யாக, இஸ்ரேலில் கட்டு​மானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்​கணக்கான பலஸ்தீன தொழிலா​ளர்​களுக்கு அந்நாட்டு அரசு தடைவி​தித்​தது. 

அவர்களுக்கு பதில் இந்தியா உள்ளிட்ட நாடு​களி​லிருந்து பணியாளர்களை தேர்வு செய்​யும் நடவடிக்கை​யில் இஸ்ரேல் மும்​முரமாக ஈடுபட்​டுள்ளது.

அதன் விளைவாக தற் போது, இஸ்ரேல் கட்டுமான நடவடிக்கை​யில் இந்தி​யர்​களின் ஆதிக்கம் அதிகரித்​துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா​விலிருந்து இஸ்ரேலுக்கு 16,000 தொழிலா​ளர்​கள், கட்டுமான பணிக்கு சென்றுள்ளனர். 

அவர்களுக்கு ஒரு ​மாதத்​துக்கு இலவச உணவு, தங்​குமிடம் தவிர ரூ.1.5 இலட்​சம் (இந்திய பெறுமதி) சம்​பளமாக வழங்​கப்​படு​கிறது. 

பாது​காப்​புக்​கும் ​முழு உத்​தர​வாதம் தரப்​பட்​டுள்​ளது என்று, ஏஎஃப்பி செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X