2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கடவுச்சீட்டை மறந்த விமானி: மீண்டும் தரையிறங்கிய விமானம்

Editorial   / 2025 மார்ச் 26 , மு.ப. 10:39 - 0     - 82

அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு கிளம்பிய விமானம் நடுவானில் பறந்த போது, கடவுச்சீட்டை கொண்டு வருவதை மறந்தது விமானிக்கு நினைவுக்கு வந்தது. இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் அமெரிக்காவிலேயே தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் யுனைட்டைட் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் சீனாவின் ஷாங்காய் நகருக்கு கடந்த 22ம் திகதி கிளம்பியது.

விமானம் கிளம்பி இரண்டு மணி நேரம் கடந்த நிலையில், பாஸ்போர்ட் கொண்டு வராததை விமானி உணர்ந்தார். இது குறித்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் யுடர்ன் எடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து மாற்று விமானம் மூலம் பயணிகள் ஷாங்காய் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .