2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கடலில் கலந்த 4,000 டொன் கச்சா எண்ணெய்

Freelancer   / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில், 4,000 டொன்  கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.

ரஷ்யாவின் கெர்ச் ஜலசந்தியில், கடந்த வாரம் 2 கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. இதில் சுமார் 9,000 டொன் எரிபொருள் கொண்டு செல்லப்பட்டது.

 அனபா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, இந்த பகுதியை தாக்கிய புயலால் இரு எண்ணெய் கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிகொண்டன.

இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத்தொடங்கியது. தற்போதுவரை 4,000 டொன்  எண்ணெய் கடலில் கலந்துள்ளது. 

இந்த எண்ணெய் கசிவு காரணமாக அப்பகுதியில், 2 டொல்பின்களும் இறந்து கரை ஒதுங்கின. கச்சா எண்ணெய் தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் அதை தடுக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X