2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கடமையை செய்யத் தவறினால் மரண தண்டனை

Freelancer   / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் பலத்த மழை காரணமாக வடகொரியாவின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. 15 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டதாலும், அவர்கள் கடமையை சரியாக செய்யாததால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அவர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவந்ததால், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி அந்நாட்டு ஜனாதிபதி கிம்ஜாங் உன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உட்பட 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தண்டனை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டாலும், அதுகுறித்த தகவல் தற்போது தான் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .