2025 மார்ச் 19, புதன்கிழமை

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 413 பேர் பலி

Freelancer   / 2025 மார்ச் 18 , பி.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் வரம்பற்ற அரசியல் மற்றும் இராணுவ ஆதரவே காரணம் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை ஹமாஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டிய இஸ்ரேல், போர் நிறுத்தத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக காசா மீது கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. 

இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள், பெண்கள் உட்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X