2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஒபாமாவுக்கு அப்செட்

Editorial   / 2024 ஜூலை 25 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இதில் அமைதி காத்து வருகிறார்.

இது குறித்து பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. அதில் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியும் என ஒபாமா எண்ணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒபாமா உற்சாகம் குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், கமலா ஹாரிஸ் இந்தப் போட்டியில் வெல்ல முடியாது என அவர் நினைக்கிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லை விவகாரத்தில் கமலா ஹாரிஸின் செயல்பாடு இதற்கு ஒரு காரணமாக அமைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி  உள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .