Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 13 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா-பங்களாதேஷ் எல்லை விவகாரம் குறித்து,இந்திய தூதுவருக்கு பங்களாதேஷ் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியா-பங்களாதேஷ் ஆகிய நாடுகள் 4,096 கிலோமீற்றர் நீளமுடைய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது உலக அளவில் 5ஆவது அதிக நீளமுள்ள எல்லையாக கருதப்படுகிறது.
பங்களாதேஷ் எல்லை வழியாக நம் பகுதிக்குள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதைக் கட்டுப்படுத்த முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
அதுமட்டுமின்றி, பங்களாதேஷில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் 5 இடங்களில் இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி வேலிகள் அமைக்க முயற்சிப்பதாக, பங்களாதேஷ் அரசு குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், இது தொடர்பாக நேரில் விளக்கம் தரக்கோரி அடுத்த சில மணி நேரத்திலேயே இந்திய தூதுவருக்கு சம்மன் அனுப்பியது.
இதையடுத்து, டாக்காவில் பங்களாதேஷுக்கான இந்திய தூதுவர் பிரணய் வர்மா, வெளியுறவு செயலாளர் ஜாஷிம் உதீனைச் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
இந்தச் சந்திப்பு குறித்து பங்களாதேஷ் இடைக்கால அரசு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago