உலகின் மிக அழுக்கான நபர் எனக் கருதப்படும் ஈரானியர் கடந்த 25 ஆம் திகதி தனது 94ஆவது வயதில் காலமானார்.
ஈரானில் தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்த அவரை அப்பகுதி மக்கள் அமவ் ஹாஜி என அழைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலங்களில் பூமியில் குழி தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ள அவருக்கு அப்பகுதி மக்கள் இணைந்து செங்கல்லால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர் எனவும் அவர் பல காலமாக அதிலேயே தனிமையில் வசித்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குளித்தால் நோய் ஏற்பட்டுவிடும் என அவர் அஞ்சியதாகவும் இதனால் தனது இளமைக்காலம் முதல் பல ஆண்டுகாலமாக அவர் குளிக்காமலே இருந்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாது கடந்த 2014-ம் ஆண்டு, தெஹ்ரான் டைம்ஸ் என்ற ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹாஜி புதிதாகச் சமைத்த உணவை தவிர்த்து விட்டார் எனவும் அவற்றுக்கு பதிலாக, அழுகிய இறைச்சிகளை உட்கொண்டு வந்துள்ளார் எனவும் விலங்குகளின் கழிவில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை புகைக்கும் வழக்கம் கொண்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்கிராமவாசிகள் முதன்முறையாக அவரைக் கட்டாயப்படுத்தி குளிக்க வைத்துள்ளனர் எனவும் , இந்த நிலையில், ஹாஜி கடந்த ஞாயிற்று கிழமை வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்து உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.