Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 நவம்பர் 15 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கேரியாவைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா இவனோவா. இவர் ” உலகின் மிகப் பெரிய உதடுகளாக தனது உதடுகளை மாற்ற வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்காக இதுவரை 32 முறை உதடுகளின் அளவை பம்ப் செய்து அவற்றை பெரிதாக மாற்றியுள்ளார்.
மேலும் இதற்காக இலங்கை மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் "என் உதடுகளைப் பெரிதாக்குவதன் மூலம் புதிய உலக சாதனை படைக்க விரும்புகின்றேன்.
இதனால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஹைலூரோனிக் அமில ஊசி செலுத்தி வருகின்றேன்” என்றார்.
ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் பார்ப்பதற்கு திகிலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக பெரும்பாலான மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்து உலகின் மிக நீளமான மற்றும் கூரான கன்னத்தை பெறுவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரியா இதற்கு முன்னர் மார்பக அளவை அதிகரிக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago