2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஈரான் துணை ஜனாதிபதி திடீர் இராஜினாமா

Freelancer   / 2024 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபத்தில் ஈரானின் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜாவித் ஜாஃப்ரி திடீரென இராஜினாமா செய்துள்ளதால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி, அஸர்பைஜானிலிருந்து கடந்த ஜூன் 19ஆம் திகதி மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூன் 28 நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி மசூத் பிசிஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகள் (44.40 சதவீதம்) கிடைத்த நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஈரானின் துணை ஜனாதிபதியாக ஜாவித் ஜாஃப்ரி பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களது நாட்டில் வைத்து இஸ்ரேல் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்துள்ளதால் தக்க பதிலடி தரப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து லெபனான், ஈராக் மற்றும் ஈரான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஈரானின் துணை ஜனாதிபதியான ஜாவித் ஜாஃப்ரி திடீரென இராஜினாமா செய்வதாக தனது  ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தான் முன்மொழிந்த 19 உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக அதிருப்தி அடைந்து, இராஜினாமா செய்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .