2024 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஈரான் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 50 பேர் பலி

Freelancer   / 2024 செப்டெம்பர் 22 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 50 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமுற்றனர். 24 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 540 கி.மீ., தொலைவில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வந்தது. இந்த சுரங்கத்தில் 70 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

சுரங்கத்தில் மீத்தேன் கசிவு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

இதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெடி விபத்தின் போது வேலை செய்து கொண்டிருந்த 24 பேரை காணவில்லை. விபத்தில் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். அவர்களை தேடும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், “சிக்கியவர்களை மீட்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு உதவவும் அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விபத்து குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. பின்னர் தான் விபத்துக்கான முழு காரணம் தெரியவரும்” என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .