2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி

Freelancer   / 2025 ஜனவரி 03 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் போரின் தாக்கம் குறையவில்லை. இதனால் பலர் தெற்கு காசாவில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். 

இந்நிலையில், நேற்று மக்கள் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில், மூன்று குழந்தைகள் உட்பட 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X