2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

“இம்முறை தோற்றால் இதுவே என் கடைசி தேர்தல்” -டொனால்ட் டிரம்ப்

Freelancer   / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றுவிட்டால் இதுவே என் கடைசி தேர்தல்” என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நாடு தழுவிய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெறத் தொடங்கியிருந்தாலும், டிரம்ப் ஆளும் ஜனநாயக கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிரம்ப், “2024இல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X