2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இந்து கோவில்கள் மீது தாக்குதல்

Freelancer   / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் மேலும் 3 கோவில்கள் மீது வன்முறை கும்பல் தாக்​குதல் நடத்தியுள்ளது. இஸ்கான் அமைப்பினர் உட்பட 17 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

இஸ்கான் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பார்க்கசென்ற இன்னொரு பூசாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இது இந்து மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேசத்தில், இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு,  சிறு​பான்​மை​யினராக உள்ள இந்துக்கள் மற்றும் கோவில்கள் மீது தொடர்ந்து தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்கு எதிராக இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் தாஸ் தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஊர்வலங்கள் நடைபெற்று வந்தன.

இந்த சூழலில், போராட்டத்தை தடுக்கும் விதமாக, சின்​மோய் கிருஷ்ணதாஸை தேச துரோக வழக்​கில் அந்நாட்டு அரசு கைது செய்​தது. அவருக்கு பிணையும் மறுக்​கப்​பட்​டுள்​ளது. 

இந்நிலை​யில், சட்டோகிராம் (சிட்​ட​காங்) பகுதி​யில்,  வெள்​ளிக்​கிழமை (29) பிற்​பகல், தொழுகை முடிந்த பிறகு, சந்தானேஷ்வரி மாத்ரி கோவில், சனீஸ்வரன் கோவில், காளி கோவில் ஆகிய 3 கோவில்கள் மீது ஒரு கும்பல் தாக்​குதல் நடத்​தப்பட்டுள்ளது. 

இதற்​கிடை​யே, சின்​மோய் கிருஷ்ண தாஸ் மற்றும் இஸ்கான் அமைப்​பினர் உட்பட 17 பேரின் வங்கிக் கணக்​குகளை 30 நாட்​களுக்கு, பங்களாதேஷ்  நிர்​வாகம் முடக்கி உள்ளது. 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X