Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப்பள்ளியில் 3 சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்த நிலையில், சமூக ஊடகங்களில் சில தவறான தகவல்கள் பரவின.
இந்த கொலையை செய்தவன் அகதியாக அடைக்கலம் தேடி இங்கிலாந்து வந்தவன் என பொய் செய்தி பரவியது. இதனால் தீவிர வலதுசாரி அமைப்பினர் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த 8 நாளாக நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி வரும் இப்போராட்டத்தால் இங்கிலாந்தில் வன்முறை வெடித்துள்ளது.
இதற்கிடையே, போராட்டக்குழுவினர் அடுத்த கட்டமாக குடியேற்ற வழக்கறிஞர்கள் அவர்களின் அலுவலகம், குடியேற்ற சேவை மையங்கள், அறக்கட்டளைகளை குறிவைத்துள்ளனர்.
இதுதொடர்பாக 39 இடங்கள் குறித்த பட்டியல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த இடங்களை குறிவைத்து போராட்டக்குழு தாக்குதல் நடத்தலாம் என்பதால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க இங்கிலாந்து பொலிஸில் இராணுவ பயிற்சி பெற்ற 6,000 சிறப்பு பொலிஸாரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை 2வது முறையாக அவசர அமைச்சரவையை கூட்டிய பிரதமர் கெயர் ஸ்டார்மர், போராட்டக்காரர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
இதுவரை இப்போராட்டத்தால் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 100 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
29 minute ago
51 minute ago
55 minute ago