Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தனது நாட்டின் ஆயுத பலத்தை அதிகரித்து அச்சுறுத்துவதாலும், பதில் நடவடிக்கையாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சிகளை தீவிரப்படுத்துவதாலும் கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தென் கொரியாவுடனான அனைத்து பொருளாதார ஒத்துழைப்பையும் முறித்துக்கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது. சமீபத்தில் இராணுவ வீரர்களிடையே கிம் ஜாங் உன் பேசும்போது, போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், “தென் கொரியாவுடன் தூதரக உறவை தொடரவோ பேச்சுவார்த்தை நடத்தவோ விருப்பம் இல்லை என்றும், தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தென் கொரியாவை வட கொரியா அழித்து நிர்மூலமாக்கிவிடும்” என மிரட்டல் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
23 minute ago