Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவில், அரிசி மற்றும் அரிசிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, ரஷ்யாவில் உள்ள பெடோரோவ்ஸ்கி நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் ரஷ்யாவின் முதன்மை அரிசி உற்பத்தி செய்யும் பகுதியான கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நெல் வயல்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகியவற்றின் காரணமாக, அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
உள்நாட்டு சந்தைக்கு நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக டிசம்பர் 31, 2024 வரை அரிசி ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நெல் விதைகளைத் தவிர, அரிசி மற்றும் அரிசிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது, ஜூன் 30, 2025 வரை நீட்டித்து ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் யூரேசியன் பொருளாதார ஒன்றியம், அப்காசியா, தெற்கு ஒசேட்டியா, அத்துடன், மனிதாபிமான உதவிகள் மற்றும் சர்வதேச போக்குவரத்துக்கான ஏற்றுமதி ஆகியவற்றுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago