Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 நவம்பர் 05 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று, செவ்வாய்க்கிழமை (05) நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நீர்யானை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் எனக் கணித்துள்ளது.
கவனம் ஈர்த்த ‘ஹிப்போ’ - மூ டெங் (Moo Deng) என்ற பெயரிடப்பட்ட அந்த நீர்யானையின் முன் பூங்கா பராமரிப்பாளர்கள் இரண்டு தர்பூசணிப் பழங்களை வைத்தனர். ஒன்றில் ட்ரம்ப் பெயரும், மற்றொன்றில் கமலா ஹாரிஸ் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த குட்டி நீர்யானை நேராக ட்ரம்ப் பெயர் பொறித்திருந்த தர்பூசணியை நோக்கிச் சென்று அதை புசித்தது. அருகிலிருந்த மற்றொரு பெரிய நீர் யானை கமலா ஹாரிஸ் பெயர் இருந்த தர்பூசணிப் பழத்தை உண்டது. இதன் மூலம் மூ டெங், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் எனக் கணித்ததாகக் கூறப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அணி மாறும் மாகாணங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ட்ரம்ப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ‘ஹிப்போ ஜோசியம்’ வீடியோ கவனம் பெற்றுள்ளது.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி அமெரிக்க மக்கள் 70 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஏற்கெனவே தங்கள் வாக்குகளை செலுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்காளர்கள் எப்போது வேண்டுமானாலும் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும். எனினும் ஜனவரி 6ஆம் திகதியே அமெரிக்க ஜனாதிபதி யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். ஜனவரி 20 ஆம் அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழா நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago