2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

Freelancer   / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், 100ஆவது வயதில், ஞாயிற்றுக்கிழமை (29) காலமானார்.

அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜிம்மி கார்ட்டர், 1977 முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயற்பட்டார்.

இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர், ஞாயிற்றுக்கிழமை (29) காலமானார். 

ஜார்ஜியா மாகாணம் பலின்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் ஜிம்மி காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் மற்ற அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தார்.

மேலும், கடந்த 2002ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி கார்ட்டர் வென்றார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X