Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 07 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மராட்டியத்தின் நாக்பூரில், 2 சிறுவர்களுக்கு எச்.எம்.பி.வி. தொற்று இன்று (7) உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் சுவாச பாதிப்புகளை கண்காணிக்கும் முயற்சியில் ஐ.சி.எம்.ஆர். ஈடுபட்டு வருகிறது.
இதில், இந்தியாவில் தொற்று பாதிப்பு எதுவும் அதிகரித்து காணப்படவில்லை என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில், திங்கட்கிழமை (6), 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது என, மத்திய சுகாதார துறை உறுதி செய்தது. இதன்படி, பேப்டிஸ்ட் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 மாத பெண் குழந்தைக்கு தொற்று உறுதியானது.
இதேபோன்று, கடந்த 3ஆம் திகதி, 8 மாத ஆண் சிசுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தை குணமடைந்து வருகிறது.
இந்த 2 குழந்தைகளுக்கும் வெளிநாட்டு தொடர்பு எதுவும் இல்லை என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததற்கான கடந்த கால பின்னணியும் இல்லை என்றும், அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேபோன்று, குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள 2 மாத ஆண் சிசுக்கும், சென்னையில் 2 குழந்தைகளுக்கும் தொற்று உறுதியானது.
இந்நிலையில், மராட்டியத்தின் நாக்பூரில் 2 சிறுவர்களுக்கு எச்.எம்.பி.வி. தொற்று, இன்று (7) உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் இந்த தோற்றம் பாதிக்கப்படோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
நாக்பூர் நகரில் ராம்தாஸ்பேட்டை பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சிறுவர்களை பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். இதில், பரிசோதனைக்கு பின்னர் 2 சிறுவர்களுக்கும் எச்.எம்.பி.வி. தொற்று உறுதியாகியுள்ளது.
7 மற்றும் 14 வயதுள்ள குறித்த 2 சிறுவர்களுக்கும் காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்துள்ளது. இதனால், அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, தொற்று எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில், மராட்டியத்தில் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அச்சப்பட வேண்டாம் என்றும், மராட்டிய சுகாதார துறை கேட்டு கொண்டுள்ளது.
இது பற்றி விரைவில் வழிகாட்டு நடைமுறைகளையும் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
29 minute ago