Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 26 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய நாட்டின் 76ஆவது குடியரசு தின விழா, இன்று (26) கொண்டாடப்பட்டது.
76ஆவது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். ஜனாதிபதி கொடியேற்றி வைத்ததும் வானில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.
குடியரசு தின விழாவில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் நடைபெற்றது.
குடியரசு தினவிழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முன்னதாக குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தொவும் சாரட் வண்டியில் கடமைப்பாதைக்கு வந்தனர்.
அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோவுக்கு முப்படை தளபதிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார்.
குடியரசு தினத்தையொட்டி, கடமைப்பாதையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago