2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

7 ஆண்டுகள் சிறை: புகாரில் சிக்கிய யூடியூபர் இர்பான்

Editorial   / 2024 மே 21 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால், அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

யூடியூபர் இர்பான் வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் சமீபத்தில் அறிவித்தார். அந்த வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும் காவல்துறையிலும் யூடியூபர் இர்பான் மீது புகார் கொடுக்க உள்ளது.

வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை என்பது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .