2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

4 பேரை கொலைசெய்த சீரியல் கில்லர் பெண்கள் கைது

Freelancer   / 2024 செப்டெம்பர் 08 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில், 4 பேரை சயனைட் கலந்த பானத்தைக் குடிக்கவைத்து கொலை செய்த சீரியல் கில்லர் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம் தெனாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குர்லா ராமனம்மா.

நடுத்தர வயதைச் சேர்ந்த இவர்கள் மூவரும் திருட்டுத்தொழிலில் ஈடுபடுவதற்காக தெனாலி பகுதியில் உள்ளவர்களைக் குறிவைப்பார்களாம். பின்னர் அவர்களிடம் அன்பாகப் பேசி சயனைட் கலந்த குளிர்பானங்களைக் குடிக்க வைப்பார்களாம். அதை குடித்தவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததும் அவர்களிடம் இருக்கும் வெகுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்களாம்.

இதுபோல், அவர்கள் கொடுத்த சயனைடை குடித்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளார்களாம். இதுதொடர்பாக ஆந்திர பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சயனைடும் திருடப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நடைபெற்ற தொடர் விசாரணையில், 32 வயதான மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் கம்போடியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X