2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

16 மர்ம மரணங்கள்:காரணத்தை ஆராய குழு நியமனம்

Freelancer   / 2025 ஜனவரி 19 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மர்ம மரணங்கள் ஏற்பட்ட நிலையில், தொற்று வியாதிக்கான சாத்தியம் எதுவும் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தின் புதல் கிராமத்தில், மர்ம நோய் பரவியிள்ளது. இதனால், கடந்த 45 நாட்களில் 16 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இது கிராமத்தினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மர்ம நோய்க்கு ஆளானவர்களுக்கு காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காஷ்மீரில் 16 பேர் மர்ம நோய் பாதிப்புக்கு பலியான சம்பவம் பற்றி ஆய்வு செய்ய அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை அமைத்துள்ளார். அந்த குழுவினர் காஷ்மீருக்கு  சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

 எனினும், தொற்று வியாதிக்கான சாத்தியம் எதுவும் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .