2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

145 நிமிடங்கள் முடங்கும் டெல்லி விமான நிலைய பணிகள்

Freelancer   / 2025 ஜனவரி 21 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 26ஆம் திகதி 75ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. 

இதற்காக டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அணி வகுப்பு மற்றும் நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வருகிற 26ஆம் திகதி வரை தினந்தோறும் 145 நிமிடங்கள் (அதாவது 2 மணி 25 நிமிடங்கள்) அதன் ஓடுபாதையை மூடுகிறது. 

குடியரசு தினத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, காலை 10.20 மணி முதல் மதியம் 12.45 மணி வரை மூட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 1,300-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே டெல்லியில் நிகழும் மூடு பனி காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X