Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 22 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பதி கோவில் வழியே, திங்கடகிழமை (21), ஹெலிகாப்டர் பறந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகம சாஸ்திரப்படி கருவறையின் உச்சியின் மீது விமானங்கள், ஹெலிகாப்டர் பறக்க கூடாது என விதிமுறை உள்ளது.
இதனால் திருப்பதி மலையில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்கவும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் வீடியோ, புகைப்படம் எடுக்கவும், திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமை (21), இந்திய இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அதிக சத்தத்துடன் ஏழுமலையான் கோவில் கருவறை மீது பறந்தது. ஹெலிகாப்டர் பறந்த நிகழ்விற்கு ஆச்சாரியார்கள், வேத பண்டிதர்கள், மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது.
ஆனால் மத்திய அரசு திருப்பதி மலையை தடை மண்டலமாக அறிவிக்க முடியாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .