2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வெயிலுக்கு 110 பேர் பலி

Freelancer   / 2024 ஜூன் 20 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாநிலங்களில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கோடை காலம் இன்னும் முடிவடையாமல், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. புதுடெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் ஜூன் 18ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பீஹார், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா உத்தரவிட்டுள்ளார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .