Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 05 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள வீடொன்றின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்த வீடு, மாவட்ட தலைநகரிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பார்கவான் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது.
கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் அளித்தனின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், தொட்டியில் இருந்த 4 சடலங்களை மீட்டனர்.
இறந்தவர்களில் ஒருவர் வீட்டு உரிமையாளர் ஹரி பிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30), மற்றொருவர் கரன் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மற்ற இரண்டு சடலங்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
முதற்கட்ட விசாரணையின்படி, சுரேஷ் மற்றும் கரண் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஒரு விருந்துக்கு ஜனவரி 1ஆம் திகதி வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் வளாகத்தில் கொல்லப்பட்டு அவர்களது சடலங்கள் கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக, பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
37 minute ago
1 hours ago