2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

“விமான உணவில் அதிர்ச்சி” மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா

Freelancer   / 2024 செப்டெம்பர் 29 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏர் இந்தியா விமானத்தில், விமான பயணி ஒருவருக்கு பரிமாறப்பட்ட, 'ஒம்லெட்'டில் கரப்பான் பூச்சி கிடந்ததையடுத்து, குறித்த விமான நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரியது.

இதுகுறித்து மேலும் தெரியவருகையில், “புதுடெல்லியை சேர்ந்தவர் சுயிஷா சாவந்த். இவர் தனது 2 வயது குழந்தையுடன் நியூயோர்க் நகரத்துக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் புதுடெல்லியில் இருந்து சென்றுள்ளார்.

இதற்கிடையே, விமான பயணிகளுக்கு ஒம்லெட்டுடன் கூடிய மதிய உணவு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை வாங்கி சுயிஷா தனது குழந்தைக்கு ஊட்டியபடி சாப்பிட்டு கொண்டிருந்த போது, 'ஒம்லெட்'டில் ஒரு கரப்பான் பூச்சி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இதனை தனது கைபேசியில் காணொளியாக பதிவுசெய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விமான நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், இதற்கு அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

ஆனாலும் சுயிஷா கோபத்தில், தான் எடுத்த காணொளியை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, “எனது 2 வயது குழந்தை என்னுடன் பாதிக்கு மேல் உணவை சாப்பிட்டு முடித்த நிலையில், குழந்தை நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஏர் இந்தியா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துவருகின்றன.S

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .