2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாலிபர் துண்டு துண்டாக வெட்டி புதைப்பு

Freelancer   / 2024 ஜூலை 29 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரூர் அருகே வாலிபர் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் தெற்கு காந்தி கிராமம் கம்பன் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் ஜீவா கடந்த 22ஆம் திகதி திடீரென காணாமல் போயுள்ளார். இதனையடுத்து தாந்தோன்றிமலை பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அவரை துண்டு துண்டாக வெட்டி புதைத்ததாக சந்தேக நபரான சசிக்குமார் ஓப்புக்கொண்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருகையில், கடந்த 2021ஆம் ஆண்டு வடக்கு காந்திகிராமம் பெரியார் நகரை சேர்ந்த மோகன்ராஜை, அவரது நண்பரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உயிரிழந்த மோகன்ராஜின் உயிர் நண்பரான சசிகுமார், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஜீவாவை கொலை செய்ய வேண்டும் என்ற முன் பகையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஜீவாவை, சசிகுமார் பழைய பகையை மனதில் வைத்து கொண்டு, முதலில் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார். தொட ர்ந்து ஆத்திரம் அடங்காமல் தனது நண்பர்களை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வரச்சொல்லி தலை, கை, கால்களை தனித்தனியாக வெட்டி அதனை முட்புதருக்குள் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைதான சசிக்குமாரிடம், கொலையான மோகன்ராஜ் “நான் இறந்ததற்கு காரணமானவர்களை நீ இன்னும் ஒண்ணும் செய்யாமல் இருக்குறியே” என தினமும் கனவில் வந்து கேட்டதின் பேரில் முதலாவதாக ஜீவாவை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .